காட்டுப்பன்றி இறைச்சியை பங்கு போட்ட தந்தை- மகனுக்கு அபராதம்
கம்பி வலையில் சிக்கி இறந்த காட்டுப்பன்றி இறைச்சியை பங்கு போட்ட தந்தை- மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் காப்புக்காட்டு பகுதியில் ஒரு சிலர் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை பங்கு போட்டு கொண்டிருப்பதாக பேரணாம்பட்டு வனசரகர் சங்கரய்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனசரகர் சங்கரய்யா தலைமையில் வனவர் மோகனவேல், வனகாப்பாளர் ராஜேந்திரன் மற்றும் வனத்துறையினர் சேராங்கல் காப்புக் காட்டிற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகரத்தினம் (வயது 70), இவரது மகன் தசரதன் (40) ஆகிய இருவரும் தங்கள் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளதால் பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருக்க கம்பி வலை வைத்திருந்ததும், அதில் சிக்கி இறந்த காட்டுப்பன்றி இறைச்சியை தந்தை- மகன் இருவரும் பங்கு போட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்களை கையும், களவுமாக வனத்துறையினர் பிடித்து 5 கிலோ எடையுள்ள இறைச்சி மற்றும் கம்பி வலை, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நாகரத்தினம், மகன் தசரதன் ஆகிய 2 பேருக்கும், மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வன பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story