வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள்- மோட்டார் சைக்கிள் திருட்டு
பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொறையாறு
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள எடுத்துக்கட்டி ஊராட்சி பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (வயது55). இவருடைய மகன்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். சம்சுல்ஹுதா அருகில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு கடந்த 7-ந் தேதி இரவு சென்று தங்கி உள்ளார்.
மறுநாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
நகை-மோட்டார் சைக்கிள்
அதில் இருந்த 5 பவுன் நகைகள், வெளிநாட்டில் வாங்கப்பட்ட சேலை, வாசனை திரவியம் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த தங்க நகைகள், பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story