வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி
வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி நடந்தது.
தோகைமலை,
தோகைமலை அருகே இந்திய வேளாண் அறிவியல் மையத்தில், திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பாக விவசாயிகளுக்கு வீட்டு தோட்டம் அமைப்பது மற்றும் பராமரிப்பது குறித்த பயிற்சி நடைபெற்றது. இதற்கு இந்திய வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவருமான திரவியம் தலைமை தாங்கி, கிராமப்புற பெண்கள் அனைவரும் வீட்டில் அருகில் இருக்கும் இடங்களை பயன்படுத்தி வீட்டு தோட்டம் அமைக்க வேண்டும், அதன் மூலம் நஞ்சற்ற காய்கறி உற்பத்தி செய்யமுடியும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சியில் வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் கவியரசு, மனவியல் தொழில்நுட்ப வல்லுநர் மாலதி, ஆய்வக உதவியாளர் தமிழ்ச்செல்வன் வேளாண்மை உதவி இயக்குனர் லீமாரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story