கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 May 2022 6:30 PM GMT (Updated: 2022-05-09T21:52:08+05:30)

வாய்மேட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வாய்மேடு:
வாய்மேடு மேற்கு துணை சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர்மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி செயலாளர் அறிவழகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமினை நாகை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சவுந்தரராஜன், வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாமில் முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

Next Story