கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தமிழககேரள எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
கோவை
கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தக்காளி வைரஸ் காய்ச்சல்
கோவையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று அச்சம் நீங்கி பொதுமக்கள் தற்போது தான் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் ஒருசில இடங்களில் தக்காளி வைரஸ் காய்ச்சல் குழந்தைகள் இடையே பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இடையே மீண்டும் அச்சம் நிலவுகிறது.
கேரள மாநிலத்தை ஒட்டி கோவை அமைந்துள்ளது. கேரளாவில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் கோவைக்கு வேலை உள்பட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
எனவே கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் மூலம் கோவையில் தக்காளி வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதார துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழக-கேரள எல்லையான வாளையாறில் சோதனைச்சாவடி அமைத்து சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது
அச்சம் தேவையில்லை
இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தக்காளி போன்ற கொப்பளம் ஏற்படும் இதன்காரணமாக இதனை தக்காளி வைரஸ் என்று அழைக்கின்றனர்.
அனைத்து வயதினருக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. தொடுதல் மூலம் இந்த நோய் பரவுகிறது.
இதற்கு எவ்வித மருந்தும் எடுக்க தேவையில்லை. தானாக குணமடைந்து விடும் எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
கோவையில் இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
வாளையாறில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தக்காளி வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இதேபோல் விமானநிலையத்திலும் சுகாதார துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் போன்று இந்த நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை. அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story