குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வல்லண்டராமம் ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அணைக்கட்டு
வல்லண்டராமம் ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொற்கொடி அம்மன் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கவில்லை என ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனனர்.
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் தொடர்ந்து குடிநீர் பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வழங்க இயலவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் வல்லண்டராமம் மூலைகேட் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை
இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஸ்ரீமதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி சுதாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சைலஜா மணி, அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்தனர்.
அவர்களிடம் பேசிய பொதுமக்கள் வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் ஏரித்திருவிழா நடக்க உள்ளதால் உறவினர்கள் வருவார்கள். இதனால் அதிக தண்ணீர் தேவைப்படும். எனவே எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் நாளைக்குள் (இன்று) குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story