சஞ்சய் ராவத் மீது கிரித் சோமையா மனைவி போலீசில் புகார்
பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததாக மேத்தா சோமையா முல்லுண்டு போலீஸ் நிலையத்தில், சஞ்சய் ராவத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
மும்பை,
பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா ஆளுங்கட்சி தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறி வருகிறார்.
இந்நிலையில் கிரித் சோமையா ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலை, உடைப்பில் இருந்து மீட்பதாக கூறி பொது மக்களிடம் நிதி திரட்டி, மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல கிரித் சோமையாவின் மனைவி மேத்தா சோமையா, கழிவறை கட்டும் பணியில் மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் மேத்தா சோமையா முல்லுண்டு போலீஸ் நிலையத்தில், சஞ்சய் ராவத்திற்கு எதிராக புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், தான் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டபோது, தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ரூ.100 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக, சஞ்சய் ராவத் பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர தன் மீது மேலும் பல பொய்யான குற்றச்சாட்டுகளை, சஞ்சய் ராவத் கூறியிருப்பதாகவும் மேத்தா சோமையா கூறியுள்ளார்.
-----
Related Tags :
Next Story