மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 9 May 2022 10:15 PM IST (Updated: 9 May 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி பலியானார்.

செங்கம்

செங்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி பலியானார்.

செங்கம் அருகே உள்ள அந்தனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 37). இவர், மேல்புழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பணிகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். மேல்பள்ளிப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story