திருப்புவனத்தில், வடமாடு மஞ்சுவிரட்டு


திருப்புவனத்தில், வடமாடு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 9 May 2022 10:16 PM IST (Updated: 9 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 117 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 117 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

வடமாடு மஞ்சுவிரட்டு

திருப்புவனத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை த.மா.கா. சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் கலந்து கொண்டன. ஒரு காளைக்கு 9 பேர் என 117 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு முன்பாக களத்தில் இறங்கும் மாடுகளுக்கும், மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் உடல் பரிசோதனை நடைபெற்றது. 

பரிசு

மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், பிடித்த வீரர்களுக்கும் பரிசுகளை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, தமிழக வீர விளையாட்டு குழு தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வழங்கினார்கள். வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி, திருப்புவனம் நகர் தலைவர் பாரத்ராஜா ஆகியோர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளை திரளான மக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.

Next Story