கர்நாடகத்தில் ஊழல்வாதிகளின் அரசு உள்ளது-குமாரசாமி
கர்நாடகத்தில் ஊழல்வாதிகளின் அரசு உள்ளது என குமாரசாமி தெரிவித்துள்ளார்
பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பாகல்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக கூறியுள்ளார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு எப்படி வந்தது?. பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தனர். இது ஊழல்வாதிகளின் அரசு. அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற வாக்குக்கு ஏற்ப தான் இந்த அரசு நடக்கிறது.
இங்கு கஜானாவை கொள்ளையடித்து டெல்லிக்கு பணம் அனுப்புகிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கேட்கிறார். நான் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஊழல்கள் குறித்து டன் கணக்கில் ஆவணங்களை வெளியிட்டேன். அந்த ஆவணங்களை வைத்து சிலர் பணம் சம்பாதித்தனர். அதனால் ஆவணங்களை வெளியிட்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story