தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த லாரி டிரைவர் சாவு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 9 May 2022 10:22 PM IST (Updated: 9 May 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

க. பரமத்தி, 
க.பரமத்தி அருகே உள்ள பவுத்திரத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இதில் கரூர்- புலியூர் அருகே வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 42). தண்ணீர் லாரியில் டிரைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கல்குவாரிக்கு வேலைக்கு சென்ற சுப்பிரமணி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கல்குவாரியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சுப்பிரமணி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story