மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம்,
லாலாபேட்டை அருகே சிந்தலவாடியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறு வழக்கம். அதேபோல் இந்தாண்டு திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. . இதையொட்டி லாலாபேட்டை, சிந்தலவாடி, விட்டுகட்டி, கள்ளப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூக்களை அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், 23-ந்தேதி அக்னிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு, கிடா வெட்டு உள்பட பல்வேறு நேர்த்திக்கடன் நிகழ்ச்சியும், 26-ந்தேதி அம்மன் மஞ்சள் நீராடி குடிபுகுந்து காவிரிக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 29-ந்தேதி அம்மன் வீதி உலா வந்து திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story