சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 10:30 PM IST (Updated: 9 May 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி சிறப்புரையாற்றினார். மேலும் காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய நிர்வாகி சித்ரா நன்றி கூறினார்.

Next Story