சாம்பாரில் கிடந்த கரப்பான் பூச்சி
சாம்பாரில் கிடந்த கரப்பான் பூச்சி
திருப்பூர்,
திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் கேசவன். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று மதியம் சாப்பிட சென்றார். அப்போது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்தினர். மேலும் கரப்பான் பூச்சி விழுந்த சாம்பார் மாதிரியை எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டல் உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஆய்வக முடிவுக்கு பிறகு சட்டப்படி சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story