2 கார்கள் மோதிய விபத்தில் மூதாட்டி பலி 7 பேர் காயம்


2 கார்கள் மோதிய விபத்தில் மூதாட்டி பலி 7 பேர் காயம்
x
தினத்தந்தி 9 May 2022 10:33 PM IST (Updated: 9 May 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

2 கார்கள் மோதிய விபத்தில் மூதாட்டி பலி 7 பேர் காயம்

ஊத்துக்குளி:
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி சித்ராவதி (வயது 82). இவர் தனது மருமகள் உமாராணி (50) மற்றும் பேரன் ஹரிஷ் (23) ஆகியோருடன் காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை ஹரிஷ் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதேபோல் கோவையில் இருந்து சேலம் நோக்கி சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த விஜய் (23), பழனிச்சாமி (49), பழனிவேல் (44), கோபி (33), தியாகராஜன் (38), மோகன்லால் (24) ஆகியோர் மற்றொரு காரில் சென்றுள்ளனர். கார் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி மேம்பாலம் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது ஹரிஷ் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் ஏறி எதிர்திசையில் சென்ற மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்ராவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறு காயத்துடன் உயிர் தப்பிய அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story