முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 12:00 AM IST (Updated: 9 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட தலைவர் சந்திரமோகன் வரவேற்றார்.மாநில துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் கல்வி மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story