தடை செய்யப்பட்ட 24 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட 24 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 May 2022 5:19 PM GMT (Updated: 9 May 2022 5:19 PM GMT)

திருப்பத்தூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 24 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், துணை தலைவர் கான்முகமது, மன்ற உறுப்பினர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பசுமை பாரத இயக்கம், அரிமா சங்கம், மழைத்துளி இயக்கம் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பஸ் நிலையம், காந்திசிலை, மதுரை ரோடு, தெற்குரத வீதி, புதுக்கோட்டை ரோடு, அண்ணாசிலை, சிவகங்கை ரோடு, கூகல்பர்க் ரோடு, வானியன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள ஆட்டு இறைச்சி கடை, கோழி இறைச்சிக்கடை மற்றும் மீன் கடைகளில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமையில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் மோகன்ராஜ், கவிதா, மற்றும் துப்புரவு பணியாளர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் பைகள் 24 கிலோ பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் பறிமுதல் தொடர்பாக செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறும் போது,. இனிவரும் காலங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்துவதோ, விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story