அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு
திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே தரியம்பட்டியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு கிராமத்தில் வயல் பகுதிகளிலும் கண்மாய் பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மஞ்சுவிரட்டுக்கு உரிய அனுமதி பெறாமல் நடைபெற்றதாக மேலபட்டமங்கலம் குரூப்பை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சித்ரா திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதில் தரியம்பட்டியைச் சேர்ந்த ராஜா, லட்சுமணன், பெரியகருப்பன், வெள்ளைகண்ணு, பெரியகருப்பன் உள்ளிட்ட 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story