மாநில அளவிலான கைப்பந்து போட்டி


மாநில அளவிலான கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 9 May 2022 10:56 PM IST (Updated: 9 May 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.

கீழக்கரை, 
கீழக்கரை மேலதெருவில் அமைந்துள்ள ஹமீதியா விளையாட்டு மைதானத்தில் போதை ஒழிப்பு விழிப் புணர்வுக்காக கைப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் சென்னை, ஈரோடு, பரமக்குடி, காளையார்கோவில், கீழக்கரை ஆகிய ஊர்களில் இருந்து 8 அணிகள் மோதின.  2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சத்தை சென்னை எப்.பி. டிசைனர் கிளப் அணி வென்றது. 2-வது பரிசு ரூ.50 ஆயிரத்தை சென்னை ஐ.சி.எம். அணி பெற்றது. 3-வது பரிசு ரூ.30ஆயிரத்தை ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வென்றது. போட்டிக்கு சதக் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் ஹாமிது இபுராகிம் தலைமை தாங்கினார். மதுரை சுங்கத்துறை ஆணையர் ஜெய்சன் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். கீழக்கரை டைம்ஸ் உரிமையாளரும் துபாய் ஈமான் கல்சர் பொதுச் செயலாளருமான ஹமீது யாசின், என்ஜினியர் கபீர், பயோனியர் மருத்துவமனை தலைமை மருத்துவர் கியாதுதீன், அவ்தாத் மக்கள் சேவை அறக்கட்டளை தலைவர் உமர் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஏ.எஸ்.கபார்கான், பாசித் இலியாஸ், அசிபர், அமீன், யாசின் சராப், செய்யது இப்ராகிம் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story