சூலாயுதத்தால் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
சூலாயுதத்தால் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலியை திருடிய நபர்கள், உண்டியல் பணத்தையும் எடுத்து சென்றனர்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இரவு கோவில் பூசாரி சுப்பிரமணி (வயது 45) அம்மனுக்கு பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
காலை வழக்கம்போல் பூைஜ செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். மர்மநபர்கள் யாரோ கோவில் முன்னால் இருந்த சூலாயுதத்தை பிடுங்கி, அதன் மூலம் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் மூலவர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் தங்க கால் காசு என மொத்தம் 3 பவுன் நகைகளை திருடிச்சென்று உள்ளனர்.
மேலும் கோவில் வெளியே இருந்த உண்டியலை உடைத்து, அதில் பகதர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணம் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை கோவில் பின்புறம் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story