தர்மபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்


தர்மபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 9 May 2022 11:07 PM IST (Updated: 9 May 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட இருசக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர்கள் நலச்சங்கம் சார்பில் 15-ம் ஆண்டு விழா மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவையொட்டி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் இருந்து ஹெல்மெட் விழிப்புணர்வை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் வாகன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மண்டபத்தை வந்தடைந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டார். ஊர்வலம் சென்ற போது, ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். பொருளாளர் இளங்கோவன், நிர்வாகிகள் சர்தார், ஜானி, மதியழகன், கந்தசாமி, காந்தி, ஜாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய தலைவர் ஜானகிராமன், மாநில பொதுச்செயலாளர் சக்திவேல், மாநில பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி பேசினார்கள். விழாவில் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Next Story