கபிலர்மலை அருகே பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கபிலர்மலை அருகே பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பரமத்திவேலூர்:
கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையத்தில் விநாயகர், பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் தொடங்கியது. இதையடுத்து காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 7-ந் தேதி 2-ம் கால யாக பூஜை மற்றும் கோபுர கலசம் வைத்தல் நடந்தது. நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பொன்காளியம்மன், விநாயகர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் பெரியசோளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியசோளிபாளையம் பொன்காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story