ஏரியில் மூழ்கி மாணவி சாவு


ஏரியில் மூழ்கி மாணவி சாவு
x
தினத்தந்தி 9 May 2022 11:08 PM IST (Updated: 9 May 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே தாய், தந்தை மீன்பிடித்தபோது ஏரியில் மூழ்கி மாணவி பலியானார்.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது(வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் ஓவியா(14). இவர், அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் கலையநல்லூரில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றனர். 
அங்கு ஓவியாவை ஏரிக்கரையில் இருக்குமாறு கூறிவிட்டு ஏழுமலையும், அமுதாவும் ஏரியில் மீன்பிடித்தனர். அவர்கள் மீன்பிடித்தபடி சிறிது தூரம் சென்று விட்டனர். 

சிறிது நேரத்திற்கு பிறகு மீன் பிடித்துவிட்டு 2 பேரும் கரைக்கு திரும்பினர். அங்கு தங்களது மகளை காணாமல், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சந்தேகத்தின் பேரில் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது மாணவி ஓவியா பிணமாக மீட்கப்பட்டார். தாய், தந்தை மீன்பிடிக்க சென்ற நேரத்தில் மாணவி ஓவியா ஏரியில் இறங்கி குளித்திருக்கலாம் எனவும், அந்த சமயத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்றும் தெரிந்தது. இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story