பணியின் போது இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்


பணியின் போது இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்
x
தினத்தந்தி 9 May 2022 11:33 PM IST (Updated: 9 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

பணியின் போது இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே சின்னகன்னூர் ராமசாமி வட்டம், பாச்சல் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சம்பத்குமார். இவர் கடந்த 30.01.2022 அன்று பணியின் போது இறந்து விட்டார். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் ஊதிய கணக்கு வைத்து இருந்த காரணத்தால், வங்கின் சார்பில் அவரது மனைவி கவிதாவுக்கு ரூ.50 லட்டசத்திற்கான காசோலையை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் மாமல்லன், ஜோலார்பேட்டை கிளை மேலாளர் கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story