கிடப்பில் போடப்பட்டுள்ள கோரையாற்று பாலப்பணி
நீடாமங்கலம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள கோரையாற்று பாலப்பணிகளை விைரந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள கோரையாற்று பாலப்பணிகளை விைரந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம் கட்டும் பணி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில் பூவனூர் தட்டி என்ற இடத்திலிருந்து கோரையாற்றின் குறுக்கே நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலம் சாலையை இணைக்கும் வகையில் போக்குவரத்து பாலம் கட்ட அப்போதைய அமைச்சர் ஆர்.காமராஜ் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இதன்படி ரூ.2½ கோடி மதிப்பில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பாலத்துக்கான தூண்களும் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பாலம் கட்டுவதற்கான காலஅவகாசம் குறிப்பிட்ட காலத்துக்கு மேலாகியும் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
துரிதப்படுத்த கோாிக்கை
இந்த பாலம் கட்டும்பணி முழுமை பெற்றால் நீடாமங்கலம் நகரில் ஓரளவுக்கு போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் பாலம் கட்டும் பணி மேலும் ஓராண்டிற்கு மேலாகும் என தெரிகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பாலம் கட்டும் பணியை துரிதமாக மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story