மின்கம்பத்தில் மினி லாரி மோதியது: மின்சார வயர் அறுந்து விழுந்து சிறுமி பலி
சூளகிரி அருகே மின் கம்பத்தில் மினி லாரி மோதியதில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சிறுமி பலியானார்.
சூளகிரி:
சூளகிரி அருகே மின் கம்பத்தில் மினி லாரி மோதியதில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சிறுமி பலியானார்.
மினி லாரி மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சிவன்யா (வயது 4). சிறுமி சிவன்யா கடந்த 8-ந் தேதி மதியம் வீட்டு முன்பு குளித்து கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரி மின் கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தில், மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்சார வயர் வீட்டுக்கு அருகில் குளித்து கொண்டு இருந்த சிறுமி சிவன்யா மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணை
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி சிவன்யா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தைஏற்படுத்தியது.
Related Tags :
Next Story