தேன்கனிக்கோட்டை அருகே தர்காவில் உரூஸ் திருவிழா


தேன்கனிக்கோட்டை அருகே தர்காவில் உரூஸ் திருவிழா
x
தினத்தந்தி 9 May 2022 11:35 PM IST (Updated: 9 May 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே தர்காவில் உரூஸ் திருவிழா நடந்தது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சூடசந்திரம் அருகே ஹஜ்ரத் ஜங்கலி பீர்பாபா தர்கா உள்ளது. இங்கு உருஸ் திருவிழா நடந்தது. தளி கோட்டையில் இருந்து புறப்பட்ட சந்தன குட ஊர்வலம் முஸ்லிம் தெரு, கடை வீதி, கும்பார் தெரு, நகர தெரு, பஸ் நிலையம், போலீஸ் நிலையம் வழியாக சென்றது. சிலம்பலி ஆட்டம் மற்றும் அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாக்கின் மீது வாளை வைத்து தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சந்தன குடம் தர்கா கொண்டு செல்லப்பட்டு துவா படிக்கப்பட்டது. பின்னர் கவ்வாலி பாட்டு கச்சேரி நடந்தது.

Next Story