சாலை அமைத்தது தொடர்பாக அதிகாரிகளுடன் வாக்குவாதம்; பொதுமக்கள் சாலை மறியல்


சாலை அமைத்தது தொடர்பாக  அதிகாரிகளுடன் வாக்குவாதம்; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 May 2022 11:36 PM IST (Updated: 9 May 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே சாலை அமைத்தது தொடர்பாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியம் அடிலம் ஊராட்சி சிக்கதிம்மணஅள்ளி முதல் வி.எம்.கொட்டாய் வரை 100 மீட்டர் சாலை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. 15 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க நேற்று முன்தினம் 5 கிராம ஊர் கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தனியார் வசம் இருந்த அந்த சாலையை பொது சாலையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குண்டும், குழியுமாக இருந்த இடத்தில் மண் கொட்டி சாலை போட்டு உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் உதவி கலெக்டர் சித்ரா உத்தரவின் பேரில் காரிமங்கலம் தாசில்தார் வினோதா மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story