மீனவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்;மக்கள்குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் வழங்கினார்


மீனவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்;மக்கள்குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 9 May 2022 11:44 PM IST (Updated: 9 May 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவியை நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

நாகர்கோவில், 
மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவியை நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள லூயிபிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது.
முகாமுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 559 மனுக்கள் கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை  மேற்கொள்ள துறை  சார்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தினார்.
ரூ.4 லட்சம் நிவாரண நிதி
மேலும் கிள்ளியூர் தாலுகா இனயம்புத்தன்துறை நடுத்தெருவைச் சேர்ந்த ரபேல் (வயது 59) என்பவர் கடந்த மாதம் 12-ந் தேதி அன்று தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து நாட்டு படகில் நான்கு மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி இறந்தார். அவருடைய மனைவிக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திருப்பதி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story