சங்கீத மும்மூர்த்திகள் இசை ஆராதனை விழா


சங்கீத மும்மூர்த்திகள் இசை ஆராதனை விழா
x
தினத்தந்தி 10 May 2022 12:01 AM IST (Updated: 10 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில சங்கீத மும்மூர்த்திகள் இசை ஆராதனை விழா கோலாகலமாக நடந்தது.

திருவாரூர்;
திருவாரூரில சங்கீத மும்மூர்த்திகள் இசை ஆராதனை விழா கோலாகலமாக நடந்தது.
 இசை ஆராதனை
திருவாரூரில் அவதரித்த சங்கீத மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகபிரம்மம் ஆகியோரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 255-வது ஜெயந்தி விழாவையொட்டி திருவாரூர் புதுத்தெரு தியாக பிரம்மம் அவதரித்த இல்லத்தில் மங்கள இசை, பஞ்சரத்தின கீர்த்தனைகள் இசை ஆராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியுரை வாசிக்கப்பட்டது. தியாகபிரம்மம் பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஆண்டான்கோவில் சிவக்குமார், கொல்லம் கோமதிஅம்மாள், ஓசூர் பிரீத்தா, சென்னை அஸ்வினி ஆகியோர் பாட்டும், ஆண்டான்கோவில் குருமூர்த்தி, கும்பகோணம் சுகுமாறன் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்ட வயலின் இசை நிகழ்ச்சி நடந்தது. 
200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள்
விழாவில் 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா குழு தலைவரும், தினமலர் ஆசிரியருமான டாக்டர் ஆர்.ராமசுப்பு தலைமை தாங்கினார். விழாக்குழு துணைத்தலைவர் ஆர்.டி.மூர்த்தி, பொதுச்செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டார். இதில் தியாக பிரம்ம மகோற்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார், நாராயணி நிதி நிறுவன தலைவர் எஸ்.கார்த்திகேயன், திருச்சி கிளாரிநெட் வித்வான் ஏ.கே.சி.நடராஜன், விழாக்குழு பொதுச்செயலாளர் தியாகபாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story