தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்


தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 May 2022 12:42 AM IST (Updated: 10 May 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலைநகர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆண்டுகளாக ரூ.4000 முதல் ரூ.5000 வரை ஊதியத்தில் 205 தொகுப்பூதிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பணி நிரந்தரம் செய்யப்படாததால் இந்த மாதம் இறுதியுடன் இவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனால் தொகுப்பூதிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே நேற்று முதல் நூற்றுக்கணக்கான தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story