கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் சமாதான கூட்டத்தில் வலியுறுத்தல்


கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் சமாதான கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2022 12:47 AM IST (Updated: 10 May 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் என்று சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செங்கோட்டை:
கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்ட சமூக அமைப்புகள் சார்பில் வருகிற 16-ந்தேதி புளியரை சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பாக செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கேரளாவிற்கு கனிமங்களை இங்கிருந்து கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பேசினார்கள். அதற்கு அதிகாரிகள், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்காமல், திட்டமிட்டபடி வருகிற 16-ந்தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்றனர். கூட்டத்தில் சமூக ஆர்வலர் புளியரை ஜமீன், சண்முகவேல், சவுந்தர்ராஜன், அண்ணாமலை, கணேசன், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story