கோரிக்கை பேனருடன் வந்த விவசாயியால் பரபரப்பு
கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை பேனருடன் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பைத்தம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு
(வயது 70). விவசாயி. இவர் நேற்று கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வருகை தந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், அவர் தன்னுடைய 1 ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டதாகவும், இது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்து விட்டேன், வருவாய்த்துறையிலும் மனு அளித்து விட்டேன், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆகவே இதை மீண்டும் நினைவு படுத்துவதற்காக மனுவுடன் வந்துள்ளேன் என்றார்.
தொடர்ந்து அவரை கலெக்டரிடம் சென்று மனு அளிக்குமாறு போலீசார் கூறினர். அதையடுத்து அவர் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story