88 சதவீத மனுக்களுக்கு தீர்வு
திருச்சி மாநகர காவல்துறையில் முதல்-அமைச்சரின் முகவரி துறை மூலம் 88 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
திருச்சி மாநகர காவல்துறையில் முதல்-அமைச்சரின் முகவரி துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் முதல் பெறப்பட்ட மனுக்களில் 2,324 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. அதாவது 88 சதவீதம் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்களை விரைந்து விசாரணை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயனிடம் கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக வழங்கப்பட்ட மனுக்களில் 754 மனுக்கள் பெறப்பட்டு அதில் 80 சதவீத மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன என்று மாநகர காவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story