பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழா
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சென்னை முருகன் பெயிண்ட் கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவில் வளாகத்தில் இரவு 7 மணி அளவில் ஏழாயிரம்பண்ணை அன்னை பராசக்தி மாதர் சங்கம், மற்றும் கோவை ஜி.கே. குரூப்ஸ் சார்பில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடக்கிறது.
தேரோட்டம்
தினமும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனம், அன்னப்பட்சி வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம் ஆகிய வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த திருவிழா 12 நாட்கள் நடக்கிறது.
கயிறு குத்து திருவிழா வருகிற 16-ந் தேதியும், 18-ந் தேதி தேரோட்டமும், 19-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story