பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 1:15 AM IST (Updated: 10 May 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் வீரபத்திரன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு கிரில் தயாரிப்பு தொழில் செய்து வருகிறார். இவரது மகள் பாண்டி மீனா (வயது 16). தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வணிகவியல் பிரிவில் படித்து வந்தார். கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு செல்லாத நிலையில் எப்போதும் செல்போனையே பார்த்துக் கொண்டே இருந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தாயார் வெளியே சென்றவுடன் பாண்டிமீனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிளஸ்-1 வகுப்புக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவியின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story