இரு தரப்பினர் மோதல்; 4 பேர் காயம்
இருதரப்பினர் மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை சிவந்திபட்டி அருகே உள்ள ஸ்ரீராமன் குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ கண்ணன் (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராஜ கண்ணன், அதே பகுதியை சேர்ந்த முருகன் (45), தங்க பாண்டி (45), கிருஷ்ண பெருமாள் (24) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story