5 மாவட்ட அரசு சித்த மருத்துவமனைகளில் புகார் பெட்டி

திருச்சி, மே.10-
சித்த மருத்துவ சேவையை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் புகார் மற்றும் ஆலோசனைகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட அனைத்து அரசு சித்த மருத்துவ மனைகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களும், நோயாளிகளும் பயன்படுத்திக்கொண்டு சித்த மருத்துவ சேவையை மேம்படுத்த உதவுமாறு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Tags :
Next Story