24,491 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
98 ைமயங்களில் இன்று நடைபெறும் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 24, 491 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
விருதுநகர்,
98 ைமயங்களில் இன்று நடைபெறும் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 24, 491 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-1 தேர்வு நடைபெறாத நிலையில் தற்போது முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் பொதுத்தேர்தல் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை பிளஸ்-1 தேர்வு நடக்கிறது.
இந்த பொதுத்தேர்வு 98 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 11,848 மாணவர்களும், 12,643 மாணவிகளும் ஆக மொத்தம் 24,491 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
கண்காணிப்பு அலுவலர்
மேலும் 241 தனித்தேர்வர்களும், 98 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதுகின்றனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலராக மாநில பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் அமுதவல்லி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் 1,615 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 8 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான குடிநீர் வசதி, தடையில்லா மின்வினியோகம், மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story