சேமிப்பு கிடங்கில் வீணாகி வரும் நெல்


சேமிப்பு கிடங்கில் வீணாகி வரும் நெல்
x
தினத்தந்தி 10 May 2022 1:33 AM IST (Updated: 10 May 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே சேமிப்பு கிடங்கில் நெல் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வல்லம்:
தஞ்சை அருகே சேமிப்பு கிடங்கில் நெல் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 
சேமிப்பு கிடங்கு
தஞ்சை மாவட்டம் வளம்பக்குடி கிராமத்தில் அரசின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. கடந்த ஆண்டு 2021-22 குறுவை அறுவடை பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், வளம்பக்குடி அரசு நேரடி சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 
இங்கிருந்து லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு அனுப்பப்படாமல் ஒரு ஆண்டை கடந்தும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வளம்பக்குடி அரசு சேமிப்பு கிடங்கில் தேங்கி கிடப்பதாகவும், அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் வீணாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். 
மூடும் பணி
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறுகையில், ‘வளம்பக்குடி சேமிப்பு கிடங்கு இந்த ஆண்டோடு மூடப்பட உள்ளது. இதனால் அங்குள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அடியில் உள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. 
அதனை வேறு மூட்டைகளுக்கு மாற்றி சேமிப்பு கிடங்கை உடனடியாக மூடுவதற்கான பணியும் நடந்து வருகிறது. இந்த பணி ஒருவார காலத்துக்குள் முடிவடையும்’ என்றார். 

Next Story