திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு விருது


திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு விருது
x
தினத்தந்தி 10 May 2022 1:35 AM IST (Updated: 10 May 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு விருது

திருச்சி, மே.10-
இந்தியா முழுவதும் 67-வது ரெயில்வே வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஐ.சி.எப்.பில் உள்ள, டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா தலைமை தாங்கி, தெற்கு ரெயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய 41 உயர் அதிகாரிகள், 157 ஊழியர்கள் மற்றும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட தெற்கு ரெயில்வேயில் உள்ள பணிமனை, கோட்டங்கள், பிரிவுகளுக்கு 37 கேடயங்கள் ஆகியவற்றை வழங்கினார். இதில் பாதுகாப்பு, பணியாளர் சேவை, மருத்துவ சேவை ஆகிய பிரிவுகளில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதுகள் திருச்சி ரெயில்வே கோட்டம் பெற்றது. அத்துடன் ஒட்டு மொத்த விருதையும் திருச்சி கோட்டம் தட்டிச்சென்றது. இந்த விருதுக்கான கேடயத்தை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யாவிடம் இருந்து, திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் பெற்றுக்கொண்டார்.

Next Story