திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கடைகள் அடைப்பு


திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 10 May 2022 1:38 AM IST (Updated: 10 May 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கடைகள் அடைப்பு

திருச்சி, மே.10-
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக மாநகராட்சி சார்பில் 58 கடைகள் கட்டப்பட்டன. இதில் சுமார் 30 கடைகள் மாநகராட்சி சார்பில் ஏலம் போய்விட்டது. மீதம் உள்ள 28 கடைகள் ஏலம் போகாமல் பூட்டியே கிடக்கிறது. இங்கு இனிப்பு கடை, டீ, டிபன், செல்போன் கடைகள் உள்ளன. ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள் அதிக அளவுக்கு பணம் கொடுத்து ஏலம் எடுத்து விட்டதால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டி வந்த நிலையில் நேற்று திடீரென்று சத்திரம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த கடைகளை நடத்தி வரும் உரிமையாளரிடம் கேட்டபோது, இந்த கடைகளுக்கு முன்னால் சுமார் 10 அடி அகலத்தில் வழி பாதை உள்ளது. இந்த வழி பாதையில் ஒவ்வொரு கடைக்கும் சுமார் 2 அடி இடத்தை எங்களுக்கு வழங்கினால் நாங்கள் கடையை பார்வையாக வைத்துவிடுவோம். பொதுமக்கள், பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறு இல்லாமல் வைத்து கொள்வோம்.எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி கடை அடைப்பு செய்து இருக்கிறோம். மாறாக மாநகராட்சியை எதிர்த்து அல்ல என்று கூறி கொள்கிறோம் என்றனர். மேலும் இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் நேற்று கடையின் உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

Next Story