திருமணமான பெண்ணுடன் வாலிபர் தற்ெகாலை


திருமணமான பெண்ணுடன் வாலிபர் தற்ெகாலை
x
தினத்தந்தி 10 May 2022 1:38 AM IST (Updated: 10 May 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே திருமணமான பெண்ணுடன் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகாசி, 
சிவகாசி அருகே திருமணமான பெண்ணுடன் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 பேர் தற்கொலை 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர், முனியாண்டி (35).
இந்தநிலையில் நேற்றிரவு சரஸ்வதியின் வீட்டுக்கு முனியாண்டி சென்றிருந்ததாக தெரிகிறது. பின்னர் சரஸ்வதி மற்றும் முனியாண்டி ஆகிய இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 
போலீசார் விசாரணை 
இருவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 விசாரணையின் முடிவில் தான் தற்கொலைக்கான காரணம் தெரியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2 பேர் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story