அம்மன் கோவில்களில் திருவிழா


அம்மன் கோவில்களில் திருவிழா
x
தினத்தந்தி 10 May 2022 1:46 AM IST (Updated: 10 May 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெற்றது.

கல்லக்குடி, மே.10-
பெருவளப்பூர், காட்டுப்புத்தூா், உப்பிலியபுரத்தில் உள்ளஅம்மன் கோவில்களில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெருவளப்பூர்
புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் கிராமத்தில்  மாரியம்மன், செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இன்று மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் வி.எஸ்.நகரில் உள்ள பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைபம்,  கிடா வெட்டும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு  மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.  
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்த வடக்கு விஸ்வாம்பாள்சமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மயில் வாகனத்தில் மாரியம்மன், குதிரை வாகனங்களில் மருதைவீரன், வேம்படியான் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வலம் வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story