கண்மாய் தலைவர்களுக்கான தேர்தல்
சாத்தூர் பகுதியில் கண்மாய் தலைவர்களுக்கான தேர்தல் நடைெபற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் பகுதியில் கண்மாய் தலைவர்களுக்கான தேர்தல் நடைெபற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தலைவர்களுக்கான தேர்தல்
சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட இருக்கன்குடி ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் உள்ள கண்மாய்களில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத்தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. சாத்தூர் தாலுகாவை பொறுத்த வரை மொத்தம் 13 சங்கங்களில் 12 சங்கங்களின் தலைவர் மற்றும் மண்டல உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள கோல்வார்பட்டி கண்மாய் சங்க தலைவர் மற்றும் 6-வது மடை ஆட்சிமண்டல உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை
இந்தத் தேர்தலானது கோல்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட திருவிருந்தான்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்தது.
இதில் கோல்வார்பட்டி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவராக தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். 6-வது மடை உறுப்பினராக மாயகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் புஷ்பா தலைமைதாங்கினார். வட்டாட்சியர் சீதாலட்சுமி, உதவி பொறியாளர்கள் சேதுராமலிங்கம் மற்றும் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் 13 தலைவர்கள் மற்றும் 51 உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story