கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சி


கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சி
x
தினத்தந்தி 10 May 2022 1:52 AM IST (Updated: 10 May 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயற்சி

மேலூர்
திருவாசகம் இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் மாணிக்கவாசகர். மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ஆகும். இங்கு அவர் பிறந்து வளர்ந்த இடம் மாணிக்கவாசகர் கோவிலாக விளங்குகிறது. பழமையான இந்த கோவிலில் இரவில் உள்ளே புகுந்த திருடன் ஒருவன் அங்குள்ள உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளான். மிக பழமையான உறுதியாக இருக்கும் அந்த உண்டியலை உடைக்க முடியாத நிலையில் முயற்சியை கைவிட்டு திருடன் தப்பியுள்ளான். இந்த கோவிலில் ஏற்கனவே இதுபோல உண்டியலை உடைக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. எனவே கோவிலில் ரகசிய கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story