நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரியும் நேற்று மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நீதிமன்ற ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட கிளை சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் பிரபாகரன், மதுரை மாவட்ட தலைவர் பார்வதி, மாவட்ட செயலாளர் பழனிவேலு, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா, அழகர் ராஜா மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story