செல்லியம்மன் கோவில் படைத்தேரோட்டம்
செல்லியம்மன் கோவில் படைத்தேரோட்டம் நடந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் ஏரிக்கரையில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி அய்யனார் கோவில் கொடியேற்றத்துடன் தொடங்குகியது. அன்று முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் நாள் படைத் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேர்த்திருவிழாவின் 9-ம் நாள் பெருந்தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. அதற்கான தேர் கட்டும் பணியில் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அன்று இரவு கிராம இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. தேர்த்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இரும்புலிக்குறிச்சி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story