பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது: கோனேரிபட்டி நீர்மின்தேக்க கதவணையில் மீண்டும் தண்ணீர் தேக்கம் மின் உற்பத்தியும் தொடங்கியது
பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோனேரிபட்டி நீர்மின்தேக்க கதவணையில் மீண்டும் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியும் தொடங்கியது
தேவூர்
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், செக்கானூர், நெரிஞ்சிபேட்டை, கோனேரிபட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் தேக்க நிலையங்களை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் நீர்மின் தேக்க தவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் முழுவதையும் திறந்து விட்டு 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். அதன்படி கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணையில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு கடந்த 15 நாட்களாக பராமரிப்பு பணி நடந்தது. அப்போது தண்ணீர் இல்லாமல் பாறை திட்டுகளாக நீர்த்தேக்க பகுதிகளில் காட்சி அளித்தது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் மின் உற்பத்தியும் தொடங்கி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story