ஈரோடு அருகே கிணற்றுக்குள் விழுந்து கிடந்த லாரி; டிரைவர் மாயம்-போலீஸ் விசாரணை


ஈரோடு அருகே  கிணற்றுக்குள் விழுந்து கிடந்த லாரி; டிரைவர் மாயம்-போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 May 2022 4:11 AM IST (Updated: 10 May 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே கிணற்றுக்குள் லாரி விழுந்து கிடந்தது. அதன் டிரைவர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மொடக்குறிச்சி

ஈரோடு அருகே கிணற்றுக்குள் லாரி விழுந்து கிடந்தது. அதன் டிரைவர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிணற்றுக்குள் லாரி

ஈரோடு அருகே உள்ள சாவடிபாளையம் புதூரை அடுத்த கேட்புதூர் என்ற இடத்தில் ரோட்டோர கிணற்றில் லாரி ஒன்று விழுந்து கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். லாரி முழுவதுமாக கிணற்றுக்குள் மூழ்கி இருந்தது தெரிய வந்தது. அதனால் டிரைவரின் கதி என்ன ஆனதோ? என்று விரைவாக அதை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள்.இதையடுத்து மீட்பு வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் இருந்து லாரி மேலே மீட்கப்பட்டது.அதன்பின்னர் கிணற்றுக்குள் டிரைவர் விழுந்து கிடக்கிறாரா? என்று தேடுவதற்காக மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடியபோது டிரைவர் கிடைக்கவில்லை.

டிரைவர் எங்கே?

இதையடுத்து மீட்கப்பட்ட லாரியின் எண்ணை கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அதில் கிணற்றுக்குள் விழுந்த லாரி கொடுமுடியை சேர்ந்த கவுதமன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை பழுது பார்ப்பதற்காக அவரிடம் வேலை பார்க்கும் செந்தில்குமார் என்பவர் ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஓட்டிச்சென்றதாகவும் தெரிய வந்தது.அப்போது பாதையின் ஓரத்துக்கு சென்றபோது நிலைதடுமாறி கிணற்றுக்குள் லாரி விழுந்துவிட்டது. உடனே வெளியே குதித்து டிரைவர் செந்தில்குமார் உயிர் தப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் மாயமான டிரைவர் எங்கே? என்று மொடக்குறிச்சி போலீசார் அவரை தேடி வருகிறார்கள். 


Next Story